Search This Blog

Saturday, February 20, 2016

வேவு பார்க்க கண்ணாடி 20/02/2016

உளவு நிறுவனங்கள் பலவகையில் உள்ளன. ஒரு நாட்டை வேவு பார்க்க, ஒரு நிறுவனத்தை வேவு பார்க்க, தனி நபரை வேவு பார்க்க என்று பலவகைகள் உள்ளன. மற்றவர்கள் அறியாமல் கண்காணிப்பதுதான் இதன் தனித்தன்மை. அதனால் இந்த வேவு பார்த்தலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுந்து கொண்டே இருக்கும்.  கண்காணிப்பு கேமராக்கள் முதல் ஆளில்லா விமானங்கள் வரை ஏராளமான உளவு சாதனங்கள் வந்துவிட்டன. இதில் சமீபத்திய வரவு கண்களில் அணிந்து கொள்ளும் கூலிங்கிளாஸ். இதை அணிந்திருக்கும்போது யாருக்கும் எந்தவித சந்தேகமும் வராது. சாதாரணமாக அணிந்து கொண்டால் போதும். இதில் மற்றவர்களை வேவு பார்க்கும் கேமரா உள்ளது. இது எதிரே நடக்கும் எல்லா விஷயங்களையும் அப்படியே அந்த கண்ணாடியில் வீடியோ காட்சிகளாக பதிவாக்கிவிடும். இதுவொரு சக்தி வாய்ந்த கேமரா. 720 பி.ஹெச்.டி. என்ற துல்லியமான பட அளவைக் கொண்டது.  பதிவு செய்வதற்கு வசதியாக இந்தக் கண்ணாடியில் 8 ஜி.பி. பிளஸ் மெமரி கார்டு உள்ளது. இதில் நவீன பேட்டரியும் உள்ளது. இது 3 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் சக்தி கொண்டது. இதில் ப்ளூடூத், வைபை ஆகிய இரண்டு தொழில்நுட்பத்தின் மூலம் தேவையான தகவல்களை திரட்டலாம். இந்தக் கண்ணாடியை ஒரு ஐபோனில் இணைத்துவிட்டால் அது கண்ணாடியில் பதிவாகும் எல்லா விஷயங்களையும் போனுக்கு அனுப்பிவிடும்.  இந்த வீடியோ பதிவுகளை மைக்ரோ யு.எஸ்.பி. கார்டிலும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதை அமெரிக்காவில் சியாட்டில் உள்ள ஜியோன்ஐஸ் என்ற கம்பெனி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்ணாடியால் பலரின் அத்து மீறிய அந்தரங்கங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment