Search This Blog

Sunday, February 14, 2016

காதலர் தினம் பிப்ரவரி 14
 
இன்றைக்கு காதலர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த தினம் கடந்த 10 ஆண்டுகளில்தான் இந்தியாவில் புகழ் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் நாள் காதலர்களால் கொண்டாடப்படும் இந்த நாளை ‘வாலன்டைன்ஸ் டே‘ என்கிறார்கள். இந்த வாலன்டைன்ஸ் என்பவர் ஒரு பாதிரியார். இவரது பெயரில்தான் காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். கி.பி. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் காதலர்களின் பிரியம் மிக்க பாதிரியார். அந்த காலக்கட்டத்தில் ரோம் சாம்ராஜ்ஜியத்தை இரண்டாம் கிளாடியஸ் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இன்றைய உலகம் போல் அன்றைய உலகம் அமைதியாக இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே அடிக்கடி யுத்தம் நடந்து கொண்டே இருந்தது. அதற்கு தொடர்ந்து வாலிப ஆண்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்நாளில் ரோம் தேசத்தில் திருமணம் முடிந்த ஆண்களை போரில் ஈடுபடுத்தக் கூடாது என்றொரு சட்டம் இருந்தது. அதனால் ராணுவத்தில் ஆட்கள் பற்றாக்குறை தொடர்ந்து இருந்தது. இந்த பற்றாக்குறையை போக்க இரண்டாம் கிளாடியஸ் இளைஞர்கள் திருமணம் செய்யக்கூடாது. அவர்கள் கட்டாயம் ராணுவத்தில் சேர வேண்டும் என்று கட்டளையிட்டார். அதனால் திருமணம் என்பது அந்நாட்டில் நடக்காத காரியமானது. இந்நிலையில் அந்தநாட்டில் வாழ்ந்து வந்த வாலன்டைன் என்ற பாதிரியார் மன்னனின் இந்தக் கட்டளையை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு ரகசிய திருமணத்தையும் செய்து வைத்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவ காதலில் விழுந்த ஆண்களும் பெண்களும் வாலன்டைனை தேடி வந்தார்கள். தன்னை நாடி வந்தவர்கள் அனைவருக்கும் பாதிரியார் திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், பாதிரியாருக்கு மரணதண்டனை விதித்தார். அவர் மரணதண்டனை விதிக்கப்பட்டு இறந்த நாளான பிப்ரவரி 14-ம் நாளை இளைஞர்கள் வாலன்டைன் தினமாகவும், திருமண தினமாகவும் கொண்டாடத் தொடங்கினர். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வாலன்டைன் தினம் காதலர் தினமாக மாறியது. அமெரிக்காவில் விடுமுறை தினமாக காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் கொண்டாட்டத்துக்கும், அதே அளவு எதிர்ப்புக்கும் குறைச்சல் இல்லை.

No comments:

Post a Comment