Search This Blog

Friday, February 12, 2016


ஈர்ப்பு  அலைகளை  கண்டுபிடித்ததில் இந்திய  விஞ்ஞானிகளுக்கு  பங்கு 

13/02/2014

புனே, பிப்.13- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்ததில்இந்திய விஞ்ஞானிகளுக்கு பங்கு உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் 1905-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ந் தேதி ஈர்ப்பு விசை தொடர்பாக வெளியிட்ட ஒரு கோட்பாடு, சார்பியல் கோட்பாடு என அழைக்கப்படுகிறது. சார்பியல் கோட்பாடு  விண்வெளியில் சூரியனைப்போன்று உள்ள நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வின் இறுதியில் கருந்துளைகளாக மாறும். அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது, அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு, அவை ஈர்ப்பு அலைகளாக வெளியாகும். இந்த ஈர்ப்பு அலைகளின் விரிவாக்கம்தான் வெளியையும், காலத்தையும் உருவாக்குகின்றன. உண்மையில் காலமும் வெளியும் ஒன்றுதான் என்பதுதான் ‘ரிலேட்டிவிட்டி தியரி’ என்னும் சார்பியல் கோட்பாடு. இந்த கண்டுபிடிப்பு அந்தக் காலத்தில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி இருப்பினும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு உண்மைதானா என்பது பற்றி இந்திய விஞ்ஞானிகள் உள்பட ஆயிரம் சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.  இப்போது, ஐன்ஸ்டீன் கூறிய சார்பியல் கோட்பாடு உண்மைதான் என்று சர்வதேச விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.  இது குறித்த அறிவிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் இயற்பியல் விஞ்ஞானி டேவிட் ரெயிட்ஜ் வெளியிடுகையில், “ நாங்கள் ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்துள்ளோம்” என குறிப்பிட்டார். பிரபஞ்சம் தோன்றியது எப்படி? இது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி கண்டறிவதற்கான புதிய வாசலை திறந்து விட்டுள்ளது. ஈர்ப்பு அலைகளை கண்டறிந்ததில் புனேயை சேர்ந்த வானியல், இயற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையத்தை சேர்ந்த விஞ்ஞானி சஞ்சீவ் துரந்தாரின் பங்கு முக்கியமானது.  இவர்தான் 1980-களின் தொடக்கத்தில் விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளில் ஆர்வம் காட்டிய நாளில், புவி ஈர்ப்பு அலைகள் என்ற அறிவியல் அற்புதம் இருப்பதை உறுதிபடக்கூறினார். ஆனால் அதை அப்போது விஞ்ஞானிகள் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை.  எப்படி உணர்வது? 2009-ம் ஆண்டு, 60 விஞ்ஞானிகளை கொண்டு இந்திய ஈர்ப்பு அலைகள் கண்காணிப்பகம் (இண்ட் இகோ) என்ற அமைப்பை ஏற்படுத்தி ஈர்ப்பு அலைகள் பற்றி ஆராய்ந்து வந்தனர். இதில் சி.எம்.ஐ. சென்னை என்று அழைக்கப்படுகிற சென்னை கணித நிறுவனம், ஐ.ஐ.டி. காந்திநகர், டி.ஐ.எப்.ஆர். மும்பை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அங்கம் வகித்தன. 130 கோடி ஒளி ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக கருதப்படுகிற இந்த ஈர்ப்பு அலைகளை எப்படி உணர்ந்து கொள்வது? புனேயை சேர்ந்த விஞ்ஞானி ஜெயந்த் நார்லிக்கர் இது பற்றி கூறும்போது, “யானை மீது ஒரு ஈ வந்து அமர்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். யானை மீது ஈ வந்து அமர்வதால் அதன் எடை கூடும். ஆனால் அதை யானை உணர முடியாது. அதேபோன்றுதான் லிகோ என்ற கருவி கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஈர்ப்பு அலை மிகமிக சிறிதானது” என்றார். இந்த கண்டுபிடிப்பு நீண்ட காலத்திற்கு நினைவுகூரப்படும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment