Search This Blog

Saturday, March 29, 2014

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் லட்சதீப திருவிழாவில் திரு.சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் நடந்து வரும் போது எடுத்த புகைப்படம் இது. எனது மகிழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.



Displaying img641.jpg

Friday, March 28, 2014


"எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!"
தி நோட்டீஸ் போர்டு (தகவல் பலகை- நிச்சயம் கவனிக்கப்படவேண்டியது .

அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்-திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷ-மாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடிய-வில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வீல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.


‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்கவைத்த ஸ்டீபன் ஹாக்கின் ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக்கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திரு மணம் முடித்தார்.


‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான

Tuesday, March 25, 2014


கோர எண்ணங்களின் விளைவால் கோரமாகிப் போன பூவுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. சட்டம் தண்டிக்காததை தர்மம் தண்டிக்கும் என்று நம்புவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது...?

 சோனாலி முகர்ஜி.. வயது 26 

 சோனாலி முகர்ஜி.. வயது 26 …..
இவர் சமீபத்தில்,, மத்திய அரசிடம்- “எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.. அல்லது என்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் ” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏன் ?

கல்லூரி மாணவியான இவர்,, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர்..
துணிச்சல் மிக்கவர்.. இவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது, மூன்று வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து தொல்லைகள் கொடுத்ததைத் தாங்கமுடியாமல்-, இனிமேலும் இப்படிச் செய்தால், நான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறார்.

உடனே கோபம் கொண்ட அந்த இளைஞர்கள், உனது அழகான முகத்தைச் சிதைத்தால்தான் நீ
சரிப்படுவாய் என்று கூறி, ஒர் இரவில்,, (2006 APRIL 22) மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்த
இவர் மீது ஆசிட்டை ஊற்றிச் சென்றுவிட்டனர்..

இன்று இவருடைய முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள்….
கண்பார்வை பறிபோனது. ஒரு பக்கக் காது கேட்காது..
இன்னும் எத்தனையோ வலிகள், அவஸ்தைகளோடு கடந்த ஆறு வருடங்களாக நடைபிணமாக
வாழ்ந்து வருகிறார்.

இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம்…….
இவர் மீது ஆசிட் ஊற்றிய மூவரில் ஒருவரை இளம் குற்றவாளி என்று சொல்லிக் கோர்ட் விடுதலை செய்து விட்டதுதான் கொடுமை.
பாதிக்கப்பட்ட இந்தப் பெண் கூறுகிறார்……
“குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நான் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்துவிட்டேன்…. இந்த தேசத்தில் நீதியின் லட்சணத்தைப் பார்த்தீர்களா ?”

இவரின் அன்றைய புகைப்படத்தையும், ஆசிட் வீச்சுக்குப் பிந்தைய புகைப்படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்..

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?



சோனாலி முகர்ஜி.. வயது 26 . இவர் சமீபத்தில்,, மத்திய அரசிடம்- “எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.. அல்லது என்னைக் கருணை கொலை செய்ய வேண்டும் ” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். ஏன் ?

கல்லூரி மாணவியான இவர்,, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தவர்.. துணிச்சல் மிக்கவர்.. இவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது, மூன்று வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்து தொல்லைகள் கொடுத்ததைத் தாங்கமுடியாமல்-, இனிமேலும் இப்படிச் செய்தால், நான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்திருக்கிறார். உடனே கோபம் கொண்ட அந்த இளைஞர்கள், உனது அழகான முகத்தைச் சிதைத்தால்தான் நீ சரிப்படுவாய் என்று கூறி, ஒர் இரவில்,, (2006 APRIL 22) மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்த
இவர் மீது ஆசிட்டை ஊற்றிச் சென்றுவிட்டனர்..

இன்று இவருடைய முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள்….
கண்பார்வை பறிபோனது. ஒரு பக்கக் காது கேட்காது.. இன்னும் எத்தனையோ வலிகள், அவஸ்தைகளோடு கடந்த ஆறு வருடங்களாக நடைபிணமாக வாழ்ந்து வருகிறார். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். இவர் மீது ஆசிட் ஊற்றிய மூவரில் ஒருவரை இளம் குற்றவாளி என்று சொல்லிக் கோர்ட் விடுதலை செய்து விட்டதுதான் கொடுமை.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் கூறுகிறார்……
“குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நான் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து வேறு ஊருக்குக் குடி பெயர்ந்துவிட்டேன்…. இந்த தேசத்தில் நீதியின் லட்சணத்தைப் பார்த்தீர்களா ?”
இவரின் அன்றைய புகைப்படத்தையும், ஆசிட் வீச்சுக்குப் பிந்தைய புகைப்படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்..
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Saturday, March 22, 2014

Monday, March 17, 2014

120 வயது வரை ஆயுள் 

" ஷ்ரங்கதாரா  " என்ற பழைமையான ஆயுர்வேத நூல் மனித வாழ்க்கையின் லட்சியமே 120 வயது வரை வாழ்வதுதான் என்கிறது. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து வயதிலும் ஏதோ ஒன்றை இழக்க நேரிடுகிறது. அதன் விபரமாவது:-

10 வயதில் குழந்தைத்தனம் போகிறது.
20 வயதில் வளர்ச்சி போகிறது.
30 வயதில் மினுமினுப்பு போகிறது.
40 வயதில் புத்திசாலித்தனம் போகிறது.
50 வயதில் தோல் ஆரோக்கியம் போகிறது.
60 வயதில் பார்வை குறைந்து போகிறது.
70 வயதில் வீ ரியம் போகிறது.
80 வயதில் உடல் வலிமை போகிறது.
90 வயதில் பாலியல் ரீதியான பாகுபாடு போகிறது.
100 வயதில் உணர்வு உறுப்புகளின் திறன் போகிறது.
110 வயதில் அனைத்துப் புலன்களின் செயல்பாடு போகிறது.
120 வயதில் ஒவ்வொன்றாக இழந்து உயிரே போய் விடுகிறது.

இவ்வாறாக "ஷ்ரங்க்கதாரா" விவரிக்கிறது.


வேலையே மனிதனின் மகத்துவம்.  

வேலை செய்யாவிடில் , அவன் ஒன்றுமில்லை.
அவனால் ஒன்றும் அடைய முடியாது, 
ஒன்றும் சாதிக்க முடியாது.

நீ ஏழையானால் - வேலை செய்.
நீ பணக்காரனானால் தொடர்ந்து - வேலை செய்.
நீ சந்தோஷமாக இருந்தால்,
 வேலையே குறியாக இரு.

சும்மாயிருந்தால் சந்தேகத்திற்கும் , 
பயங்களுக்கும் வழிவகுக்கிறது. 
ஏமாற்றங்கள் ஏற்படும்போது - வேலை செய். 

உனது ஆரோக்கியத்திற்கு 
ஆபத்து வந்தால் - வேலை செய்.
நம்பிக்கை தளரும்போதும் - வேலை செய்.

கனவுகள் தகர்க்கப்படும் போதும் , 
நம்பிக்கை அறவே போன போதும் 
வேலை செய் 

உன் வாழ்வே ஆபத்தில் இருப்பதாக 
நினைத்து வேலை செய். 
அது உண்மையில் அப்படித்தான். 

வேதனை எதுவரினும் வேலை செய். 
விசுவாசத்துடன் வேலை செய். 
நம்பிக்கையுடன் வேலை செய். 

சரீர மற்றும் மன நோய்களுக்கு 
வேலை செய்வதுதான் மாபெரும் மருந்து.

Sunday, March 16, 2014

நரேந்திர மோடி பற்றி பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் கூறியுள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஓன்று.


இந்திய பாராளுமன்ற தேர்தல் செலவுகள் குறித்த இந்த விபரம் யோசிக்க வைத்த ஓன்று.

Saturday, March 15, 2014

வலைப்பதிவுகள் ( Blogs ) வரலாறு  

இணையம் வருவதற்கு முன்பு அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே மக்கள் தொடர்பு சாதனங்களாக கோலோச்சின. இணையத்தில் நமது சிந்தனைகளை எழுதுவதற்குரிய வாய்ப்புக்கள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் Blogs என்ற வலைப்பதிவுகள். 

சுருக்கமாகச் சொன்னால் " பிளாக் " என்பது தனிமனிதர்கள் நிர்ணயிக்கும் இணையதளம். இதில் அந்த நபர் தனக்கு விருப்பமான கருத்துக்கள் , படைப்புக்கள் , படங்கள் , வீடியோக்கள் , என வலைப்பதிவின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ஆங்கிலத்தில் Blogs என்கிறார்கள். இந்த Blogs உருவானதே ஒரு சுவாரஸ்யமான கதை.

ஜான் பர்கர் என்பவர் 1997 டிசம்பர் 17 இல் "வெப்-பிளாக் " என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். 1999 இல் பீட்டர் மெர்ஹோல்ஸ் என்பவர்  பீட்டர் மி.காம் என்ற வலைத்தளத்தில் வெப்-பிளாக் என்பதை வீ-பிளாக்  என்று நகைச்சுவையாக இரண்டாகப் பிரித்து எழுதினர். அதைப்பார்த்த பைரா லேப்ஸில் வேலை பார்த்து வந்த ஈவன் வில்லியம்ஸ் என்பவர்க்கு பொறி தட்டியது. அவர் வெறுமனே பிளாக் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டார். 

"பிளாக்" என்றால் எழுதுவது. "பிளாக்கர்" என்றால் எழுதுபவர் என்றும் அர்த்தம்.அப்படி அவர் ஆரம்பித்த " பிளாக்கர் " தான் இன்று உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போனது.அதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுகள் ஒரு சின்னத் தகவல் பலகையாகவோ, சின்னக் குழுக்களின் விஷயங்களைப் போடும் ஓர் இடமாகவோ தான் இருந்தன. பிளாக்கர் தான் வலைப்பதிவை எளிதாக்கி உலகமெங்கும் பரவலாக்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒப்பன் டைரி , லைவ் ஜெர்னல் என்று இரண்டு முக்கியமான தளங்கள் இருந்தன.

1999-ல் பிளாக்கர் அறிமுகமானாலும் 2002-ல் தான் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பலரும் வலைப்பதிவை ஆரம்பிக்க பிளாக்கரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.ஆண்டே அதை GOOGLE நிறுவனம் வாங்கி விட்டது. 

முதலில் வெறுமனே தனியார் உரையாடல்களாய் இருந்த வலைப்பதிவுகள் உண்மையான வீச்சைப் புரிந்து கொண்ட பின்னர் பல வகைகளிலும் பயன்பட ஆரம்பித்தன. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் செலவில்லாத விளம்பர உத்தியாகவும் தகவல் பரிமாற்று தளமாகவும் வலைப்பதிவுகள் செயல்பட ஆரம்பித்தன.பிரிட்டன் லேபர் கட்சித் தலைவர் டாம் வாட்சன் ஆரம்பித்த வலைப்பூ அரசியல் வலைப்பதிவுகளுக்கு ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.


Friday, March 14, 2014



உண்மையின் குரல்

சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன்

சராசரியாக இருந்து சாவது தான்

உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய

மிகப் பெரிய குற்றம் ...
பிரார்த்தனை

இறைவா எங்களுக்கு மாற்ற முடியாததை 
ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் 
மாற்றக் கூடியதை மாற்றும் துணிவும் 
இவற்றை பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்