Search This Blog

Monday, July 6, 2015


பொம்மைகள்
குழந்தைகளை குதூகலமாக இருக்க வைப்பது பொம்மை தான். இந்த பொம்மைகள் செய்வது பழங்காலம் முதலே இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் மரத்தில் விலங்குகளைப்போல் உருவம் செய்து விளையாடுவது, சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் இருந்திருக்கிறது. அதன் பின்னர் அலுமினியத்தில் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினார்கள். சுட்ட களிமண்ணால் பொம்மைகள் செய்து அழகிய துணிகளால் அதற்கு அலங்காரம் செய்யும் முறையும் எகிப்தியர்களிடம் இருந்தது. கிரேக்கர்கள் மெழுகினால் பொம்மை செய்தார்கள். ரோம் நாட்டில் எலும்பிலும், தந்தத்திலும் உருவங்களை செதுக்கி பொம்மைகளை உருவாக்கினார்கள். இந்த பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடும் பெண்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது பொம்மைகளை காதல் தேவதையான ‘வீனசுக்கு‘ அர்ப்பணம் செய்வார்கள். இதனால் வீனஸ் திருப்பதி அடைந்து அழகிய குழந்தைகளை அருளுவாள் என்பது அவர்களின் நம்பிக்கை. இதன் பின்னர் ஹாலந்தில் செய்யப்பட்ட பொம்மைகள், உலக அளவில் பிரபலமாயின. 18-வது நூற்றாண்டின் முடிவில் பிரான்சிலும், ஜெர்மனியிலும் சீனக்களிமண்ணைக்கொண்டு பொம்மைகள் செய்யத் தொடங்கினர். எளிதில் உடையக்கூடியவை என்றாலும் அழகாக விளங்கின. 19-வது நூற்றாண்டின் மத்தியில் தான் துணி பொம்மைகள் தோன்றின. எளிதில் உடையாத செலுலாயிட் பொம்மையைச் செய்து லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்தது ஜப்பான். உந்து விசையால் இயங்கும் பொம்மைகள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி உலகமெங்கும் பிரபலமடைந்தன.

No comments:

Post a Comment