Search This Blog

Monday, July 6, 2015


கரடிகளாக மாறிய நாய்கள்? (07.07.2015)
சீனாவின் மகுவான் கவுண்டியில் வசித்து வரும் வாங் கையு என்பவர், வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 2 நாய்க்குட்டிகளை வாங்கி வந்தார். அவற்றை மிகவும் செல்லமாக வளர்த்து வந்த அவர், தினமும் அவற்றுக்கு தேவையான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது நாய்களை விட மிகவும் அதிகமான உணவுகளை சாப்பிட தொடங்கின. இதனால் 2 ஆண்டுகளில் ஒவ்வொன்றின் எடையும் சுமார் 45 கிலோவை தாண்டி விட்டன. அதுமட்டுமின்றி வாங் கையுவின் வீட்டில் நின்ற கோழிகளையும் அடித்து சாப்பிட தொடங்கி விட்டன. இதனால் வாங் கையுவுக்கு அவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் வனத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது, வாங் கையு வளர்த்து வந்தவை நாய்களல்ல, ஆசியாவின் மிகவும் கொடூரமான கரடிகள் என தெரிய வந்தது. ஒரு ஆணும், ஒரு பெண்ணுமான அந்த 2 கரடிகளும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

No comments:

Post a Comment