Search This Blog

Monday, July 20, 2015


விசாரணை கைதிகள்

மனித உரிமைகள் அமைப்பு 1960-ல் உருவாக்கிய வார்த்தைகள் தான் ‘பிரிசனர் ஆப் கான்சியஸ்’ என்பது. இதற்கு எந்த ஒரு செயலையும் செய்யாமல் தன்னுடைய இனம், மதம், நிறம், மொழி, நம்பிக்கை, வாழ்க்கை முறை, இனச்சேர்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர்களைத் தான் பிரிசனர் ஆப் கான்சியஸ் என்று கூறுகிறார்கள். இந்த வகை கைதிகள் உலகம் முழுவதும் ஏராளமானோர் இருக்கிறார்கள். 

டிராவிஸ் பிஷப் என்ற அமெரிக்க ராணுவவீரர் செய்த தவறு ‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று சொன்னது தான். இன்று வரை அவர் சிறையில் இருக்கிறார். 

மெக்சிகோவின் சாண்டியாகோ பகுதியில் உள்ள ஒரு சந்தையில், பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி அதிகாரிகள் சோதனைக்குச் சென்றனர். அங்கு கடை போட்டிருந்தவர்களை அவர்கள் மிரட்டினர். அப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் ஜெஸிந்ரா பிரான்சிஸ்கோ மார்ஷியல் என்ற ஐஸ்கிரீம் விற்கும் பெண்ணின் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளினர். அது பொய் வழக்கு என்று நிரூபிக்க 21 வருடங்கள் ஆயிற்று. ஆனால் அதுவரை அந்த பெண் கைதியாக சிறையில் இருந்தார். 

இவ்வாறு குற்றம் செய்யாமல் சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் ஏராளம். இந்திய சிறைகளில் கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 357 கைதிகள் இருந்தனர். (ஆனால் இந்திய சிறைகளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 87 பேரை அடைப்பதற்கான இடவசதியே உள்ளது). சிறையில் இருக்கும் அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள் அல்ல. 

இவர்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 38 பேர் குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள். படிப்பறிவும், வசதியுமற்ற இந்த கைதிகள் 20, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கிடைத்தாலே, அதிகபட்சமாக 14 ஆண்டுகள் தான் சிறை. ஆனால் வழக்கு விசாரணை என்ற பெயரில் ஆயுளுக்கும், சிறை தண்டனையை கொடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றன 

அந்தந்த நாட்டு அரசாங்கங்கள். இதில் ஒரு மாற்றம் வந்தால் தான் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் விமோசனம் வரும், அவர்களது எண்ணிக்கையும் குறையும்.

No comments:

Post a Comment