Search This Blog

Monday, July 6, 2015


5,500 ஆண்டு பழமையான கைரேகை

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டென்மார்க்கில் லோலண்ட் தெற்கு கடலோரப்பகுதியில், 5 ஆயிரத்து 500 ஆண்டு பழமையான பீங்கான் பாத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பீங்கான் பாத்திரத்தில் அதை உருவாக்கிய தொழிலாளியின் கைரேகை பதிந்துள்ளது. அடியில் தட்டையான பாகத்தை கொண்டுள்ள இந்த பாத்திரத்தின் கழுத்து, புனல் வடிவத்தில் உள்ளது. இது புனல் கண்ணாடி குவளை கலாசாரத்தை (கி.மு.4000-2800) பிரதிபலிப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கலாசாரம் ஸ்காண்டிநேவியா மற்றும் வட ஐரோப்பாவின் முதல் விவசாயிகளை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. 3 பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது அதில் ஒன்றுதான் உருவாக்கிய கலைஞரின் கைரேகை பதிந்துள்ள இது பீங்கான் பாத்திரம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (04.07.2015)

No comments:

Post a Comment