Search This Blog

Monday, July 6, 2015


புவி ஈர்ப்பு எதிர்ப்பு விசை

இந்த பிரபஞ்சத்தை நான்கு சக்திகள் தான் இயக்குகின்றன என்று இத்தனை காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் இப்போது ஐந்தாவது சக்தி ஒன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள். சரி அந்த முதல் நான்கு சக்திகள் என்னென்ன? புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி, அணுவுக்குள் இருக்கும் மெலிய சக்தி ஆகியவைதான் அந்த 4 சக்திகள். புவி ஈர்ப்பு சக்தி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். மேலே இருந்து ஒரு பொருள் கீழே வருவது இதனால் தான். அடுத்ததாக மின் காந்த சக்தி. இந்த சக்தியைக் கொண்டுதான் டி.வி, ரேடியோ சேனல்கள், டி.வி. ரிமோட், செல்போன் போன்றவை இயங்குகின்றன. 3-வது சக்தி அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி ஆகும். அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்கள் இருக்கின்றன. இவற்றில் புரோட்டானையும், நியூட்ரானையும் ஒட்ட வைக்கும் சக்தியே அணுவுக்குள் இருக்கும் வலிமையான சக்தி ஆகும். இந்த சக்தியை எரித்துத் தான் சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் ஒளிர்கின்றன. அணுவுக்குள் இருக்கும் மெலிய சக்தி என்பது அணுவின் மையத்தில் இருக்கும் நியூக்ளியஸ் என்ற உட்கரு வெளிப்படுத்தும் சக்திதான். இதைத்தான் அணுசக்தி என்று அழைக்கிறோம். எப்படியோ இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டுபிடித்து விட்டோம். இந்த 4 சக்திக்குள்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். சமீபத்தில் அவர்கள் 5-வதாக ஒரு சக்தி இருக்கிறது என்றும், அதன் பெயர் புவி ஈர்ப்பு எதிர்ப்பு சக்தி என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது. என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சுருங்கிக் கொண்டே போகிறது. இந்த இடங்கள் கருப்புப் பள்ளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருப்புப் பள்ளங்கள் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கின்றன. இவற்றின் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் அதை தம்முள் இழுத்துக் கொள்கின்றன. இந்த ஈர்ப்பில் இருந்து சூரியன், பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் என்று எதுவும் தப்ப முடியாது. இதைக் கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானியான டாக்டர் எஸ்.சந்திரசேகர். மிக சமீப காலத்தில் தான் பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக புவிஈர்ப்பு எதிர்ப்பு விசை இருப்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். அது பிரபஞ்சத்துக்கு வெளியே எங்கோ ஒரு இடத்தை நோக்கி வினாடிக்கு 700 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஏதோ ஒரு பொருளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது எப்படி? எதனால்? புதிராகவே உள்ளது. இந்த 5-து சக்தி பிரபஞ்சத்தை அழித்து விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.

No comments:

Post a Comment