Search This Blog

Monday, July 6, 2015



ஏலத்துக்கு வருகிறது, அபூர்வ பைபிள்

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் உலகின் 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி ஆங்கிலத்தில் 1526-ம் ஆண்டு முதல் முதலாக அச்சிட்டு வெளியானதுதான், வில்லியம் டின்டேல் மொழி பெயர்ப்பு பைபிள். அந்த பைபிளில் இருந்து புதிய ஏற்பாடு, 1537-ல் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அபூர்வ புதிய ஏற்பாட்டில் ஒன்று, விரைவில் லண்டன் சோத்பை நிறுவனத்தில் ஏலத்துக்கு வருகிறது. இதை கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் தற்போதைய அதிபர், 1960-களில் ஒரு பழைய புத்தகக்கடைகளில் புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, 25 ஷில்லிங்கிற்கு வாங்கி உள்ளார். இந்த புதிய ஏற்பாடு தற்போது 35 ஆயிரம் பவுண்டிற்கு (சுமார் ரூ.35 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது. (04.07.2015)

No comments:

Post a Comment