Search This Blog

Monday, July 13, 2015


நாற்காலியுடன் பறந்தவர் கைது
கனடாவின் கல்காரி பகுதியை சேர்ந்த வாலிபர் டேனியல் பூரியா. இவர் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பலூன்களை ஆன்லைன் மூலம் வாங்கி, நாற்காலி ஒன்றில் கட்டினார். பின்னர் அதனுடன் ஒரு பாராசூட்டையும் இணைத்து விட்டு விண்ணில் பறந்தார். இவ்வாறு 2 கி.மீ. தூரம் பறந்து சென்ற பூரியா, தான் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து திசைமாறி சென்று ஒரு வயல்வெளியில் தரையிறங்கினார். அவரது நாற்காலி பல கி.மீ. தூரத்துக்கு அப்பால் ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. பிரபல கம்பெனி ஒன்றின் விளம்பரத்துக்காக அவர் இந்த விந்தையான செயலில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்களுக்கு குழப்பமும், அச்சமும் ஏற்படுத்தியதாக பூரியாவை போலீசார் கைது செய்தனர். அந்த பலூன்கள் வெடித்து பூரியா கீழே விழுந்திருந்தால் அவருக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது போலீசாரின் வாதமாகும். (12.07.2015)

(அடேங்கப்பா எப்படிப்பட்ட யோசனை...?)

No comments:

Post a Comment