Search This Blog

Friday, July 10, 2015


போலீஸ் துப்பாக்கிக்கு வேலை இல்லை

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குற்ற செயல்களால், ராணுவம் மற்றும் போலீசார் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி உள்ளது. ஆனால் நார்வே போலீசார் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் துப்பாக்கிக்கு பெரும்பாலும் வேலை கொடுக்காமலே இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அங்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கடந்த ஆண்டு வெறும் 42 சந்தர்ப்பங்களில் மட்டுமே போலீசார் துப்பாக்கியை ஏந்தியுள்ளனர். இதில் 2 முறை மட்டுமே சுடப்பட்டு உள்ளது. அதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. கடந்த 2013-ம் ஆண்டை எடுத்துக்கொண்டால், அந்த ஆண்டு வெறும் 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் அங்கு நடந்துள்ள துப்பாக்கிச்சூட்டில் 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் மட்டும் தலா ஒருவர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் விஷேசம் என்னவென்றால், கடந்த 2011-ம் ஆண்டு ஆஸ்லோவில் தீவிரவாதி ஒருவர் அரங்கேற்றிய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட போதும், நார்வே போலீசார் ஒரே ஒரு முறை மட்டுமே துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். (11.07.2015)

No comments:

Post a Comment