Search This Blog

Monday, March 14, 2016


மாசி மாத நெல்லிக்கனியின் சிறப்பு 12/03/2016

நெல்லிக்கனியை அதியமானுக்கு அவ்வை கொடுத்த கனி என்பர். நெல்லிக்கனி மார்கழி, தை மாதங்களில் நன்றாக விளைந்திருக்கும். அதன் பிறகு நான்கு மாதங்கள் வரை விற்பனைக்கு வரும். அதன் பிறகு வராது. மாசி மாதத்தில் வரும் நெல்லியை சிறப்பித்துச் சொல்வர்.

இதை சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். இது மலமிளக்கி. தாகத்தை தணிக்க வல்லது. இதயத்திற்கு நன்மை தரும். நெல்லிக்காயை கோடைக்காலத்தில் ஏற்படும் பித்த அதிகரிப்பை தணிக்க பயன்படுத்தலாம்.

நெல்லிக்கனி போதிய அளவு கிடைக்காவிட்டால் நெல்லிக்கனி கிடைக்கும் போது நெல்லி பானம் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு காய்ந்த நெல்லிக்கனிகளை சுத்தம் செய்து கொட்டையை எடுத்து விட்டு இரவில் நீரில் ஊற வைக்க வேண்டும். மண்பாணை அல்லது கண்ணாடி பாத்திரம் ஊற வைப்பதற்கு ஏற்றது.

மறுநாள் காலையில் ஊறிய நீரை ஒரு துணியில் வடிகட்டி கொஞ்சம் உப்பு சேர்த்து குடிக்கலாம். சிலருக்கு கோடை கொடுமையாக இருக்கும். பித்தம் அதிகமாகும். சிலருக்கு பசி எடுக்காது. தண்ணீர் அடிக்கடி குடிப்பார்கள். இந்த பிரச்சினைகளை தணிக்க மேற்கூறிய நெல்லி பானத்தை குடிக்கலாம்.

நெல்லிக்கனியை போல வைட்டமின் சி நிறைந்த கனி வேறு இல்லை. ஆரஞ்சு சாற்றை விட 20 மடங்கு சக்தி வாய்ந்தது. ஒரு நெல்லிக்கனி ஒன்றரை ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைக்கக் கூடிய சி வைட்டமினை தருகிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் சி குறைவு. இதனாலேயே நோய்கள் தொற்றுகின்றன.

நெல்லிக்கனியை தொடர்ந்து உண்டு வருவதால் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். நெல்லிக் கனி ஒரு முக்கியமான பழ உணவு. இது மருந்தாகவும் இருப்பதால் இதனை தவிர்க்காமல் உண்பது நல்லது.

No comments:

Post a Comment