Search This Blog

Thursday, August 13, 2015


அண்டத்தின் மொத்த நீளம்
ஒரு பொருள் இயங்கிக்கொண்டிருக்கும்போதோ அல்லது திசை
மாறிக்கொண்டிருக்கும் போதோ அதன் எடை உணரப்படுவதில்லை. ஆனால், இயங்கிக்கொண்டிருக்கும் பூமியின் மீதுள்ள நம்முடைய எடையை உணர முடிகிறதே எப்படி? பொருள் ஓடுவதற்கும் அதன் எடைக்கும் சம்பந்தமில்லை. நம் எடை என்பது பூமிக்கும் நமக்கும் இடையில் செயல்படும் நிறையீர்ப்பு விசை. அது பூமி ஓடினாலும் நின்றாலும் அப்படியேதான் இருக்கும். 

அதே வேளையில் பூமி சுற்று அதிகரித்தால், பூமியில் இருந்து தூக்கி எறியும் நிலை ஏற்படும். அதனால், எடை குறைவு ஏற்படும். அதுபோல பூமி மெதுவாக சுற்றினாலும் நமது எடை மேலும் அதிகரிக்கும். அண்ட வெளியில் பல நட்சத்திர கூட்டங்களை கொண்ட பல அண்டங்கள் உள்ளன. சூரியனை உள்ளடக்கிய பல நட்சத்திரங்களை கொண்ட நமது அண்டம், அண்ட தொகுப்புகளின் விளிம்பில் உள்ளது. ஹவாய் விண்வெளி ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரெண்ட் டுல்லி தான் இதனை கண்டுபிடித்தவர். இந்த அண்டம் நீள் வட்டம் போன்ற தட்டையான வடிவமைப்பைக் கொண்டது. 

அண்டவெளியின் நீளத்தை ஒளியை வைத்து ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் செல்லும். நமது அண்டத்தின் ஒரு புள்ளியில் இருந்து எதிர் பகுதியில் மற்றொரு புள்ளிக்கு சென்றடைய ஒளிக்கு 100 ஆண்டுகள் பிடிக்கும். அப்படியென்றால் அண்டத்தின் நீளத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

No comments:

Post a Comment