Search This Blog

Monday, August 31, 2015


மோசமான டிரைவர்கள் 

உலகிலேயே மோசமான டிரைவர்கள் இருப்பது இந்தியாவில்தான் என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல உலக அளவில் அதிக வாகன விபத்துக்கள் நடப்பதும் இந்தியாவில் தான் என்றும் கூறுகிறது. குடிபோதையில் மிதக்கும் டிரைவர்கள், முறையான ஓட்டுனர் பயிற்சி இல்லாமை, டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் என இதற்கு காரணமாக கூறுகிறார்கள். 

இந்தியாவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 1.30 கோடி. இவை வருடத்துக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் மரணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் அமெரிக்காவில் வருடத்துக்கு 41 ஆயிரம் மரணங்களே நிகழ்கின்றன. 

இந்தியாவில் 100 கார்களுக்கு, ஒரு சாலை மரணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் 5 ஆயிரம் கார்களுக்கு ஒரு மரணமே ஏற்படுகிறது. ஏன் இந்த வித்தியாசம்? அமெரிக்கர்கள் குடிப்பதில்லையா? அவர்கள் வேகமாக கார் ஓட்டுவதில்லையா? என்ற கேள்வி எழுகிறது. 

வளரும் நாடுகளில், வாகனங்களின் சராசரி வேக வரம்பு இந்தியாவைவிட அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 300 கி.மீ.க்கு மேல் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களும், சாலைகளும் உள்ளன. ஆனால், அவர்கள் எப்படி தொடர்ந்து விபத்துக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்? 

அமெரிக்காவில் சாதாரண டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கே கடுமையான விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் உள்ளன. 

 பத்து ஆண்டுகளில் சாலை மரணங்களை 20 சதவீதமாக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து 40 சதவீதத்தை இலக்காக வைத்திருக்கிறது. மலேசியா போன்ற நாடுகள் கூட 10 ஆயிரம் வாகனங்களுக்கு 3 விபத்துக்களாக குறைப்பதில் உறுதியாக உள்ளன. 

சுவீடனில் சாலை மரணம் 1997-ல் இருந்து பூஜ்ஜியமாக இருக்கிறது. அங்கு விபத்தால் ஒரு மரணம் கூட நிகழவில்லை. இதன் மூலம் சாலை விபத்து முற்றிலும் தடுக்கக் கூடியதே என்று அந்த நாடு உலகத்துக்கே நிரூபித்துக் காட்டியுள்ளது. 

குடிபோதை இல்லாமல், தங்கள் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உலகின் மோசமான டிரைவர்கள் என்ற பெயரை இந்திய டிரைவர்களால் உடைக்க முடியும். சாலை விபத்துகளில் உலகில் முதல் நாடாக இருக்கும் இந்தியா என்ற பெயரையும் மாற்ற முடியும்.

No comments:

Post a Comment