Search This Blog

Tuesday, August 11, 2015


60 வருடத்துக்கு மேல் கருவை சுமந்த பாட்டி
10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளை என்று பலரும் தங்கள் பிள்ளைகளை சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெண், அதுவும் 91 வயதான ஒரு பாட்டி 60 வருடத்துக்கு மேலாக தனது கர்ப்பப்பையில் ஒரு கருவை சுமந்து வந்திருக்கிறார். 

தென் அமெரிக்க நாடான சிலியை சேர்ந்த அந்த பாட்டியின் பெயர் எஸ்டெலா. சமீபத்தில் இவர் கீழே விழுந்து விட்டார். அவர் சிகிச்சை பெற மருத்துவமனை சென்றபோது, அவரது வயிற்றைப் பார்த்த டாக்டர்கள், வயிறு பெரிதாக இருந்ததால் கட்டி ஏதும் இருக்குமா என அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அவர்களுக்கு அதில் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், அவரது கர்ப்பப்பையில் இருந்தது கெட்டியான ஒரு கரு. 

இந்த கருவை அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமந்து வந்துள்ளார். கல் குழந்தை என்று அழைக்கப்படுகிற இந்த கருவால் அவருக்கு உயிராபத்து ஏற்படவில்லை. அதே நேரத்தில் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய் விட்டது இவரது கணவர் கடந்த ஜனவரி மாதம் இறந்து விட்டார். மணமாகி 74 ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தும் குழந்தை என்கிற கனவை அடைய முடியாமலேயே அவர் இறந்து விட்டார் என்று இப்போது வருத்தப்படுகிறார் இந்தப் பாட்டி. 

இந்த கருவை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பாட்டியின் வயதை கருத்தில் கொண்டு அகற்றுவதில்லை என டாக்டர்கள் முடிவு எடுத்துள்ளனர். 11/08/2014

No comments:

Post a Comment