Search This Blog

Wednesday, October 14, 2015



உலகின் விலை உயர்ந்த பிஸ்கட் 

உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி, தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கியது. இதில் பயணிகள், பணியாளர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்பிழைத்த சில பயணிகளை எஸ்.எஸ்.கார்பதியா என்ற கப்பல் காப்பாற்றியது. இந்த மீட்பு பணிகளுக்கு, கார்பதியா கப்பலில் பயணித்த ஜேம்ஸ் பென்விக் என்ற பயணியும் உதவி புரிந்தார். அப்போது ஒரு உயிர்காக்கும் படகில் இருந்து பிஸ்கட் ஒன்றை ஜேம்ஸ் பென்விக் எடுத்து வந்தார். இது டைட்டானிக் கப்பல் கேப்டன் உண்பதற்காக வைத்திருந்த பிஸ்கட் ஆகும். இதை ஜேம்ஸ் பென்விக், தனது வீட்டில் ஒரு குறிப்புடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பிஸ்கட், இங்கிலாந்தில் உள்ள ஒரு ஏல நிறுவனம் மூலம் தற்போது ஏலம் விடப்படுகிறது. இது ‘உலகிலேயே விலை உயர்ந்த பிஸ்கட்’ என அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த பிஸ்கட் சுமார் ரூ.10 லட்சம் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (15.10.2015)

No comments:

Post a Comment