Search This Blog

Sunday, June 28, 2015


உலகத்திலேயே மிக உயரமான ஏரி

டிட்டிகாகா’ ஏரி 

உலகத்திலேயே மிக உயரமான ஏரி தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்டேஸ் மலையில் அமைந்துள்ள ‘டிட்டிகாகா‘ ஏரிதான் அது. கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த எரி. டிட்டிகாகா ஏரி இரண்டு நாடுகளுக்கு சொந்தமானது. பெரு நாட்டில் ஏரியின் பெரும் பகுதி அமைந்துள்ளது. பொலிவிய நாட்டில் ஏரியின் சிறிய பகுதி அமைந்துள்ளது. இந்த ஏரி அதிக நீளம் கொண்டது. 220.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஏரியின் அகலம் 110.4 கி.மீ ஆகும். இதில் பல ஆறுகள் வந்து கலக்கின்றன. டேஸ்கவுடேரா என்ற ஒரே ஒரு ஆறு மட்டும் இதிலிருந்து புறப்படுகிறது. இந்த ஏரியின் அருகில் சன், மூன் போன்ற பல சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. பூமத்திய ரேகைக்கு மிக சமீபமாக இந்த ஏரி அமைந்திருந்தாலும், கோடை காலத்தில் அமெரிக்காவில் உள்ள மற்ற எல்லா ஏரிகளையும் விட குளிர்ந்தே இருக்கிறது. அதற்கு காரணம், இது கடல் மட்டத்தில் இருந்து வெகு உயரத்தில் அமைந்திருப்பதே. இவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியின் அருகே மரங்கள் அதிக அளவில் வளர்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. இதுமட்டுமில்லாமல் கரையோரங்களில் மர்மமான அழிவுச்சின்னங்கள் சில காணப்படுகின்றன. இதனைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் தற்போது வரை ஆராய்ந்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment