Search This Blog

Saturday, March 15, 2014

வலைப்பதிவுகள் ( Blogs ) வரலாறு  

இணையம் வருவதற்கு முன்பு அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே மக்கள் தொடர்பு சாதனங்களாக கோலோச்சின. இணையத்தில் நமது சிந்தனைகளை எழுதுவதற்குரிய வாய்ப்புக்கள் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் Blogs என்ற வலைப்பதிவுகள். 

சுருக்கமாகச் சொன்னால் " பிளாக் " என்பது தனிமனிதர்கள் நிர்ணயிக்கும் இணையதளம். இதில் அந்த நபர் தனக்கு விருப்பமான கருத்துக்கள் , படைப்புக்கள் , படங்கள் , வீடியோக்கள் , என வலைப்பதிவின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ஆங்கிலத்தில் Blogs என்கிறார்கள். இந்த Blogs உருவானதே ஒரு சுவாரஸ்யமான கதை.

ஜான் பர்கர் என்பவர் 1997 டிசம்பர் 17 இல் "வெப்-பிளாக் " என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். 1999 இல் பீட்டர் மெர்ஹோல்ஸ் என்பவர்  பீட்டர் மி.காம் என்ற வலைத்தளத்தில் வெப்-பிளாக் என்பதை வீ-பிளாக்  என்று நகைச்சுவையாக இரண்டாகப் பிரித்து எழுதினர். அதைப்பார்த்த பைரா லேப்ஸில் வேலை பார்த்து வந்த ஈவன் வில்லியம்ஸ் என்பவர்க்கு பொறி தட்டியது. அவர் வெறுமனே பிளாக் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டார். 

"பிளாக்" என்றால் எழுதுவது. "பிளாக்கர்" என்றால் எழுதுபவர் என்றும் அர்த்தம்.அப்படி அவர் ஆரம்பித்த " பிளாக்கர் " தான் இன்று உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போனது.அதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுகள் ஒரு சின்னத் தகவல் பலகையாகவோ, சின்னக் குழுக்களின் விஷயங்களைப் போடும் ஓர் இடமாகவோ தான் இருந்தன. பிளாக்கர் தான் வலைப்பதிவை எளிதாக்கி உலகமெங்கும் பரவலாக்கிவிட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒப்பன் டைரி , லைவ் ஜெர்னல் என்று இரண்டு முக்கியமான தளங்கள் இருந்தன.

1999-ல் பிளாக்கர் அறிமுகமானாலும் 2002-ல் தான் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பலரும் வலைப்பதிவை ஆரம்பிக்க பிளாக்கரின் பெயர் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.ஆண்டே அதை GOOGLE நிறுவனம் வாங்கி விட்டது. 

முதலில் வெறுமனே தனியார் உரையாடல்களாய் இருந்த வலைப்பதிவுகள் உண்மையான வீச்சைப் புரிந்து கொண்ட பின்னர் பல வகைகளிலும் பயன்பட ஆரம்பித்தன. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் செலவில்லாத விளம்பர உத்தியாகவும் தகவல் பரிமாற்று தளமாகவும் வலைப்பதிவுகள் செயல்பட ஆரம்பித்தன.பிரிட்டன் லேபர் கட்சித் தலைவர் டாம் வாட்சன் ஆரம்பித்த வலைப்பூ அரசியல் வலைப்பதிவுகளுக்கு ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.


No comments:

Post a Comment